Description
இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள். அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதம். வேதங்கள் நான்கு என வகுத்தவர் வியாசர் என்பதுதான் வேதங்கள் குறித்து பெரும்பாலானோர்க்கு தெரிந்த தகவல். ஒரு புறம் அத்வைதிகள் பிரம்மத்துக்கு உருவமில்லை, குணமில்லை என்கின்றனர். ஆனால் நடைமுறையில் உருவ வழிபாடுதான் வேத மந்திரங்களுடன் நடைபெற்று-வருகிறது. இரண்டுமே வேதத்திற்கு உகப்பானதுதானா அல்லது இரண்டில் ஒன்றுதான் வேதத்துக்கு சம்மதமானதா?பிரம்மத்துடன் இரண்டறக் கலப்பதுதான் முக்தி, அதை உயிருள்ளபோதே அடையலாம் என்கின்றனர் அத்வைதிகள். பிரம்மத்துடன் இரண்டறக் கலத்தல் சாத்தியமில்லை என்கின்றனர் விசிஷ்டாத்வைதிகளும், த்வைதிகளும். ஒருவர், ‘விஷ்ணுவே மேலான தெய்வம். ‘நாராயண பரம் ப்ரம்ம’ என்கிறார். மற்றொரு உபந்யாசகர், ‘சிவன்தான் முதன்மையான தெய்வம்’ என்று கூறி அதற்கு ஆதாரமாக ருத்ரத்தில் வரும் ‘ப்ரதமோ தைவ்யோ பிஷக்’ என்ற சொற்றொடரைச் சொல்கிறார்.இறப்புக்குப் பின் உயிர் என்ன ஆகிறது? மறு பிறப்பென்றால் எப்பொழுது? அது பற்றியும் தெளிவு இல்லை. இப்படிப்பட்ட முரண்பட்ட கருத்துகளைக் கூறுபவர் அனைவரும் வேதத்தை மிக உயர்வாக மதிக்கிறார்கள். அவர்கள் தங்கள் கருத்துக்கு வேதத்தையே ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.உண்மையில் வேதம் என்னதான் கூறுகிறது? தெள்ளத் தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.