Description
கிரீடம், பரதம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, செங்கோல், அமரம், தனியாவர்த்தனம் போன்ற அமரத்துவம் வாய்ந்த மலையாள சினிமாக்களை எழுதியவர் ஏ.கே.லோகிததாஸ். அவருடன் நெருக்கமாகப் பழகிய ஜெயமோகன் அவரது நினைவுகளுடன் அவர் சினிமாக்களைப் பற்றிய அவதானிப்புகளையும் கலந்து எழுதிய நூல் இது. லோகி என்ற மனிதனை, கலைஞனைக் காட்டும் படைப்பு இது. உணர்வெழுச்சிகொண்ட நடையில் எழுதப்பட்டுள்ளது.