Description
சிறுதானிய உணவுகளின் மேல் இப்போது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நமது உடலை பாதுகாக்க சிறு தானிய உணவுமுறைதான் ஒரே வழி என்கிற உண்மை ஊர்ஜித-மாகியிருக்கிறது. ஏனெனில் சிறு தானியங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. சிறு தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, கொழுப்பு சத்து குறைகிறது, உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஆனால் எப்படிச் சமைப்பது? சிறுதானியங்களைக் கொண்டு விதம்விதமாக சுலபமாக, சுவையாக சமைத்துச் சாப்பிட பலவகையான டிபன் அயிட்டங்களை செய்முறை குறிப்புகளை இந்தப் புத்தகத்தில் அள்ளித் தந்திருக்கிறார் சமையல் நிபுணர் ஸ்ரீ வித்யா ஜெகந்நாதன்.தினை, சாமை, சோளம், கம்பு, கேழ்வரகு, வரகரிசி போன்ற சிறுதானியங்களைக் கொண்டு செய்யக்கூடிய சிற்றுண்டிகள் குறித்து ரகம் ரகமாக 100 சமையல் குறிப்புகள் கொண்ட இந்தப் புத்தகம் உங்கள் கையிலிருந்தால் சிறு தானிய சமையலின் எக்ஸ்பர்ட் நீங்கள்தான். சமைத்து அசத்துங்கள். பாராட்டுகளை அள்ளிக் குவியுங்கள். இனி உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் உங்கள் கைகளில்.