பட்டைய கிளப்பு: ப்ராண்ட் பற்றிய க்ராண்ட் அறிமுகம்

Save 10%

Author: சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

Pages: 184

Year: 2015

Price:
Sale priceRs. 220.00 Regular priceRs. 245.00

Description

நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. பொருள், சேவை, அனுபவம் என்று நீங்கள் எதை விற்பனை செய்ய விரும்பினாலும் சரி. உங்கள் தொழில் முயற்சி வெற்றி பெற வேண்டுமானால், உங்கள் துறையில் நீங்கள் நம்பர் 1 ஆக வேண்டுமானால், ப்ராண்டிங் பற்றி நீங்கள் தெரிந்துகொண்டே ஆகவேண்டும்.பலரும் நினைப்பதுபோல் ப்ராண்ட் என்பது வெறுமனே ஒரு பெயர் மட்டுமல்ல. நீங்கள் உற்பத்தி செய்த பொருளுக்கு ஒரு பெயரை வைத்துவிட்டால் அது ப்ராண்ட் ஆகிவிடாது. ப்ராண்ட் என்பது உங்கள் நிறுவனத்தின் அடையாளம். உங்கள் போட்டியாளர்களிடம் இருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டும் அடிப்படை அம்சம்.· ஒரு பிசினஸ் ஐடியாவை ப்ராண்ட்டாக மாற்றுவது எப்படி?· ஒரு ப்ராண்ட்டின் பெயர், லோகோ ஆகியவற்றை எப்படி வடிவமைக்கவேண்டும்?· சந்தையில் ஒரு ப்ராண்டை அறிமுகப்படுத்துவது எப்படி? பிரபலப்படுத்துவது எப்படி?· போட்டியாளர்களின் சவாலை முறியடித்து உங்கள் ப்ராண்டை நம்பர் 1 ஆக்குவது எப்படி?இந்திய அளவிலும் உலக அளவிலும் பெரும் சாதனைகள் நிகழ்த்திய புகழ்பெற்ற ப்ராண்டுகளின் செயல்பாடுகள், அந்த ப்ராண்டுகளைப் பிரபலப்படுத்த அந்நிறுவனங்கள் கையாண்ட உத்திகள், அவர்களிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் என்று பக்கத்துக்குப் பக்கம் சுவாரஸ்யங்களை அள்ளி வழங்கி நம்மை வியக்க வைக்கிறார் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி.இதைவிட எளிமையாக, இதைவிடச் சுவையாக ப்ராண்டிங் பற்றிச் சொல்லித் தரும் இன்னொரு புத்தகம் தமிழில் வந்ததில்லை.

You may also like

Recently viewed