Description
இந்திரநீலம் கிருஷ்ணன் தன் காதலால் தன் சத்யபாமை, ருக்மிணி, ஜாம்பவதி, நக்னஜித்தி, மித்ரவிந்தை, லட்சுமணை, பத்ரை, காளிந்தி என்னும் எட்டு நாயகியரையும் உருவாக்கி எடுப்பதன் கதை.உலகளந்தவனின் உள்ளத்தில் நீங்காது அமர்ந்த எட்டுத் திருமகள்கள் அவர்கள். நீங்காதவர்கள் பிரியவோ மீண்டும் இணையவோ முடியாது. அது ஆகவே இதெல்லாம் ஓர் இனிய விளையாட்டு மட்டுமே. அவர்களின் கன்னிமை ஏக்கமும், காதலின் துயரமும், ஆழத்துத் தனிமையும், காமத்தின் களிப்பும், மனைபுகுந்தபின் உரிமையாடலும், ஒருவரோடொருவர் கொள்ளும் போராட்டமும் எல்லாம் அவர்கள் எங்கும் நீங்கவேயில்லை என்னும் நிலையில் நிகழும் மாயைகள்.அந்த விளையாட்டை நிகழ்த்துவது அழகென்றும் செல்வமென்றும் ஆணவமென்றும் தன்னைக்காட்டும் இவ்வுலகத் திரு. அதன் வடிவாகிய சியமந்தக மணி. அனைவரையும் தன் ஆட்டவிதிகளின் படி சுழற்றியடிக்கிறது. ஆழத்தில் தொடங்கி ஆழத்திற்கே மீள்கிறது. அதுவும் அவன் நீலமேயாகும். இந்நாவல் எட்டுத்திருக்கள் சூழ அவன் இருக்கும் துவாரகை எனும் ஆலயத்தின் காட்சி.இந்திர நீலம் - வெண்முரசு நாவல் வரிசையின் ஏழாவது நாவல்.ஜெயமோகன் மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுதி வருகிறார். அதன் ஏழாவது நூல் இது.இந்த செம்பதிப்பில் வண்ண ஓவியங்கள் இல்லை.இதை நீங்கள் விபிபியில் ஆர்டர் செய்யமுடியாது.