Description
‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளிவந்த ஹிட் தொடர்!செயல் திறமையை அதிகரிப்பது எப்படி?செல்வத்தைப் பெருக்குவது எப்படி?விற்பனையைப் பெருக்குவது எப்படி?சந்தையை வசப்படுத்துவது எப்படி?வெற்றிக்கான தாரக மந்திரம் எது?வாழ்க்கையைப் பயனுள்ளதாக ஆக்குவது எப்படி?இப்படி உங்களுக்குள் எழும் ஒவ்வொரு கேள்விக்கும் இதில் விடை இருக்கிறது.நூற்றுக்கணக்கான மலர்களில் அமர்ந்து அதி சுவையான தேனை உறிஞ்சித் தனது தேன் கூட்டில் சேர்த்துவைக்கும் உற்சாகத் தேனீ போல் நூலாசிரியர் தான் படித்த நூற்றுக்கணக்கான புத்தகங்களில் இருந்து மிகச் சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து அறிமுகம் செய்திருக்கிறார்.இது புத்தகமல்ல. பொக்கிஷங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய நூலகம். உங்களை அடியோடு புரட்டிப்போட்டு மாற்றியமைப்பது மட்டுமே இதன் ஒரே குறிக்கோள்.நூலாசிரியர் டாக்டர். ஆர். கார்த்திகேயன், மருத்துவ உளவியலில் முனைவர் பட்டம், மனித வளத்துறையில் கார்ப்பரேட் பணி, பின் நிர்வாக ஆலோசகர், பயிற்சியாளர், உளவியலாளர், எழுத்தாளர், திரைப்பட ஆய்வாளர் எனப் பன்முகம் கொண்ட ஆளுமை. கனமான விஷயங்களை எளிய மொழியில் சுவையோடு சொல்வதால் இவர் எழுத்துகள் சமீப காலங்களில் மிகப் பிரபலம்.