Description
அர்ஜுனன் வென்று மணந்தவர்கள் நால்வர். திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு உலகைச் சேர்ந்தவள். ஒவ்வொரு வெற்றியிலும் அவன் தன்னைத் தானே கண்டடைந்துகொள்கிறான். அக்கண்டடைதலின் உச்சத்தில் தன் ஐந்தாவது துணையாகிய காண்டீபத்தை பிறிதொன்றாக உணர்கிறான்.மகாபாரத அர்ஜுனன் வெறும் வில்லேந்தி அல்ல. தனக்கென ஏதும் நாடாமல் போர்புரிந்த கர்மயோகி. ஞானமுழுமை அவனுக்கே சொல்லப்பட்டது. அறிந்துக் கடந்து அவனே மெய்மைதான் என்றானான். அந்த அருந்ததவத்தானின் பயணத்தின் தொடக்கத்தைச் சித்தரிக்கிறது இந்நாவல்.வெண்முரசு நாவல்வரிசையில் எட்டாவது நாவல் இது. மகாபாரததின் திருப்புமுனைத்தருணங்களுக்கு முன்னால் ஒவ்வொன்றும் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ளும் தருவாயில் நிகழ்கிறது. கதையும் கதைக்கு அப்பாற்பட்ட சொல்வெளியுமென நெய்யப்பட்டது. ஒரு தனிநாவலாகவே முழுமைகொண்டது.இந்த செம்பதிப்பில் வண்ண ஓவியங்கள் இல்லை.இதை நீங்கள் விபிபியில் ஆர்டர் செய்யமுடியாது.