மாமல்லபுரம்


Author: சு.சுவாமிநாதன்

Pages: 168

Year: 2016

Price:
Sale priceRs. 220.00

Description

இந்தியா என்ற சொல், ஒருவர் மனத்தில் பல ஆயிரம் படிமங்களை உருவாக்குகிறது: விரிந்த பசுமையான தாவரங்கள், ஆன்மிக ஞானம், நம்பமுடியாத அளவு வேறுபாடுகளைக் கொண்ட நிலக்காட்சிகள் என அனைத்துமே மனத்துக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவைதாம். மௌரியர்கள் காலம் தொடங்கி, இந்தோகிரேக்க, குப்த, பல்லவ, சோழ கலைச்செல்வங்கள் யாவும் இந்த உத்வேகத்தின் விளைவாக உருவானவையே.மாமல்லையில் 7ம், 8ம் நூற்றாண்டில் உருவான கோவில் வளாகம் பண்டைய கால மதச் சின்னங்களுக்கு ஓர் உதாரணம். அவற்றின் கலை உச்சம், அவற்றின் பின்னணியில் இருந்த அரசர்கள் என அனைவரும் நம் பெருமுயற்சிக்கு இடையறாது ஊக்கம் தருபவர்கள்.நம் வளமான கலாசாரப் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ளவும் அவற்றைப் பாதுகாக்கவும் உதவும் வகையில் இந்தப் புத்தகம் பல்லவ கட்டடக் கலையையும் சிற்பக் கலையையும் பற்றிய ஓர் அறிமுகத்தை உங்கள்முன் எடுத்துவைக்கிறது. பல்லவ அரசர்களின் மேதைமையில் விளைந்து, செயலாக்கம் பெற்று, கல்லில் வடிக்கப்பட்ட கலையின் உருவம், உள்ளடக்கம், பாணி ஆகியவற்றைப் பற்றிய அறிமுகமே இந்தப் புத்தகம்.மாமல்லபுரத்தின் முக்கியத்துவம் பற்றிய புரிதலில் கணிசமான நேரத்தைச் செலவிட்டிருக்கிறார் பேராசிரியர் சுவாமிநாதன்.வாசகரின் அனுபவத்தைப் பலமடங்கு அதிகரிக்கிறது அசோக் கிருஷ்ணசுவாமியின் கண்ணுக்கு விருந்தாகும் படங்கள்.

You may also like

Recently viewed