Description
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் வெர்டிகோவால் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆனால் தங்களுடைய பிரச்னை வெர்டிகோ என்பதை உணராமலேயே வெவ்வேறு மருந்துகளை உட்கொண்டு பலன் கிடைக்கும் என்று அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முதலில் சரியான பரிசோதனை முறைகளைப் பயன்படுத்தி வெர்டிகோவைக் கண்டறிய-வேண்டியது அவசியம். அப்போதுதான் தீர்வை நோக்கி நகரமுடியும்.காதில் ஏற்படும் தொந்தரவுகள் மற்றும் மூளையின் அசாதாரணத்தன்மையால் வெர்டிகோ ஏற்படுகிறது. தலைசுற்றல் மட்டுமல்ல சமநிலையை அறிவதிலும் வெர்டிகோ உள்ளவர்களுக்குப் பிரச்னை இருக்கும்.· வெர்டிகோ ஏன் ஏற்படுகிறது?· யாருக்கெல்லாம் ஏற்படும்?· அதன் அறிகுறிகள் என்னென்ன?· வெர்டிகோ ஏற்பட்டால் நினைவாற்றல் மறைந்துவிடுமா?· சிகிச்சை என்ன? தீர்வு என்ன?· வெர்டிகோ பிரச்னை உள்ளவர்கள் என்னவெல்லாம் செய்ய-வேண்டும், செய்யக்கூடாது?பல்வேறு விருதுகளையும் பாராட்டு-களையும் பெற்ற டாக்டர் ஏ.வி. ஸ்ரீனிவாசனின் இந்தப் புத்தகம் வெர்டிகோவைப் புரிந்துகொள்ளவும் அதிலிருந்து மீண்டு வரவும் உதவும்.இவரது ‘பார்க்கின்ஸன்ஸ் பயங்கரம்’, ‘நினைவாற்றல் நிரந்தரமா?’ போன்ற நூல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.