பாயும் தமிழகம்: தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு


Author: சுசிலா ரவீந்திரநாத்

Pages: 408

Year: 2017

Price:
Sale priceRs. 400.00

Description

தமிழில்: எஸ். கிருஷ்ணன்1980களின் ஆரம்பத்தில் பம்பாயும் ஓரளவுக்கு தில்லியுமே இந்தியாவின் பொருளாதார உலகில் ஆதிக்கம் செலுத்திவந்தன. கல்கத்தா ஓரளவு வலிமையுடன் இருந்தது. பெங்களூர் ஓய்வுபெற்றவர்களின் சொர்க்கபுரி. மதராஸ் என்பது ஒரு பெரிய கிராமம் மட்டுமே.இன்றைய நிலை என்ன? கொல்கத்தா இந்தியப் பொருளாதார வரைபடத்திலிருந்து மறைந்துவிட்டது. மும்பையும் தில்லியும் இன்றும் அதிகாரமையங்களாக இருக்கின்றன. தெற்கில் பெங்களூரு முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக மாறியிருக்கிறது.ஹைதராபாத் வளர்ச்சியின் படிகளில் வேகமாக ஏறிவருகிறது. ஆனால், இந்த இரண்டு பகுதிகளைவிடவும் அதிகத் தொழில் மையங்கள் இருக்கும் இடம் சென்னை! இருந்தும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி இந்திய அளவில் கூட யாருக்கும் தெரியாத ரகசியமாகவே இருக்கிறது. தமிழக நிறுவனங்களும்கூட பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனாலும்கூட தமிழகம் தொழில்ரீதியாக முன்னேறியிருக்கும் மாநிலமாக மதிக்கப்படுவதில்லை. இந்தப் புத்தகம் முதல்முறையாக தமிழகத்தின் அடையாளத்தை மீட்டெடுத்து இந்தியப் பொருளாதார வரலாற்றில் அது வகிக்கும் இடத்தைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகிறது.தமிழகத்தின் நீண்டகாலப் பாரம்பரியம் மிகுந்த நிறுவனங்களில் ஆரம்பித்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வரை உள்ளூர் சாதனைகள், வெளியில் இருந்து வந்து சாதித்தவர்கள் என அனைத்தைப் பற்றியும் விரிவாக அலசுகிறது இந்தப் புத்தகம். இந்தியத் தொழில்மயமாதல் வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு குறித்து விரிவாக ஆராயும் முதல் நூல் என்று இதைச் சொல்லமுடியும்.வணிகவியல் மாணவர்கள், கார்ப்பரேட் எக்ஸிக்யூட்டிவ்கள் மட்டுமல்லாமல் வர்த்தகம், நிதி நிர்வாகம், தொழில் முனைவு போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.“வரலாறு எழுத நடுநிலையான மனநிலை வேண்டும். தரவுகளுக்கு உண்மையாக நடந்துகொள்வதோடு நுட்பமாக அவற்றைப் புரிந்து-கொள்ளும் புத்திசாலித்தனமும் இருக்கவேண்டும். இந்தப் புத்தகம் அந்த இரண்டு நிபந்தனைகளையும் நன்கு பூர்த்தி செய்கிறது. தேசத்தின் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் தமிழகம் அந்தச் சாதனையைத் தனது தனித்தன்மைமூலம் எட்டியிருக்கிறது. போட்டியில் சளைக்காமல் ஈடுபடும் அதே நேரம் குறைத்து மதிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச இலக்குகள் கொண்டது... எனினும் பணிவு மிகுந்தது. தமிழகத்தின் அந்த ஆன்மாவை இந்தப் புத்தகம் அருமையாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.”- ஆர்.சேஷசாயி, இன்ஃபோசிஸ், சேர்மன், போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் டாடா, பிர்லா, அம்பானி, மிட்டல் என எந்தப் பெரிய வர்த்தக முதலைகளும் இல்லாமலேயே தமிழகம் தொழில் துறையில் சாதனைகள் படைத்து வருகிறது. அது எப்படிச் சாத்தியமானது? அதைச் சாத்தியப்படுத்திய கதாநாயகர்கள் யார் யார்? சுசிலா ரவீந்திரநாத் அந்தச் சாதனையைச் சாதகமான நிலையில் இருந்து பார்த்திருக்கிறார். எளிமையான அதே நேரம் உத்வேகமூட்டும் நடை. அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.”- பிரதீப்தா கே.மொகாபாத்ரா, கோச்சிங் ஃபவுண்டேஷன் இந்தியா லிட்- சேர்மன், ஸ்பென்ஸர் அண்ட் கம்பெனி லிட் - முன்னாள் நிர்வாக இயக்குநர்

You may also like

Recently viewed