மர நிறப் பட்டாம்பூச்சி


Author: கார்த்திகைப் பாண்டியன்

Pages:

Year: 2015

Price:
Sale priceRs. 140.00

Description

நீண்ட இடைவெளிக்குப்பின் நேர்த்தியான கதைகளை வாசிக்கிற பரவசத்தோடு ரகசியங்களைப் பதுக்கி வைத்து கதை சொல்லும் வித்தையும் சுவாரஸ்யப்படுத்துகிறது. நேர் நேர் தேமா வகையிலான புளித்துப்போன கதை சொல்லல் முறையிலிருந்தும் மொழியிலிருந்தும் விடுவித்துக் கொண்டு தனித்து நிற்கும் இந்தக் கதைகளுக்குள் வாசகனை அந்ததரங்க உரையாடலுக்கு அழைக்கும் வீர்யமிருக்கிறது. கதைகள் இயங்கும் வெளிகளுக்காக இக்கதைகள் மிக முக்கியமான சில உரையாடல்களைத் துவக்கி வைக்குமென்று திடமாக நம்புகிறேன். - லஷ்மி சரவணக்குமார் கார்த்திகைப்பாண்டியனிடம் கவனிக்கத்தக்க விஷயம் மிகக் கட்டுப்படுத்தப்பட்ட மொழி நடை. மிகுந்த நாடக வாய்ப்புகள் உள்ள தருணங்களை கூட ஒரு பொறியாளருக்கே உரிய கூர்மையுடன் விவரித்துச் செல்கிற பாங்கு. நம் மென் உணர்வுகளை வருடிக் கொடுக்க வளையாத முரட்டுத்தனம். -போகன் சங்கர்

You may also like

Recently viewed