Description
தரை கீறி வெளிவரும் முளைதரும் பசும் மகிழ்ச்சியை அன்பளித்த நாளாக அமைந்தது செப். 11. துயரங்களையும் இழப்புகளையும் உலகுக்கு தந்த இந்த நாள் எங்கள் குடும்பத் துக்கு மட்டும் விட்டுப்போன உறவுகளை மீண்டும் மலரச்செய்த நாளாகவும் புதிய சொந்தங்களைத் தந்த நாளாகவும் மீண்டும் என் நட்பை பலப்படுத்திய நாளாகவும் தன்னை மாற்றிக்கொண்டது. அழைக்கப்பட்ட உறவினர்களும் நண்பர்களும் தங்கள் வீட்டு நிகழ்வாகவே கலந்துகொண்டு சிறப்பித்த னர். எனது மகிழ்வான நாட்களில் இதுவும் ஒன்று. இத்தனையையும் என் எழுத்தே சாதித்தது...