Description
நாம் இவர்களைப் பார்த்திருக்கிறோம். நமக்கு அருகில்தான் இவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய கோபங்களும் வலிகளும் சந்தோஷங்களும் நமக்கெல்லாம் நெருக்கமானவை. இருந்தாலும் ஜெயந்தி சங்கரின் எழுத்தில் இவர்களைக் கதாபாத்திரங்களாகத் தரிசிக்கும்போது இதுவரை கிட்டாத புதிய அனுபவம் நமக்கு வாய்க்கிறது. பழகிய மனிதர்களைப் புதிய கண்கள் கொண்டு பார்க்க ஆரம்பிக்கிறோம். தெரிந்த கதைகளை தெரியாத கோணத்திலிருந்து ரசிக்க ஆரம்பிக்கிறோம். சிங்கப்பூரைக் களமாகக் கொண்டிருந்தாலும் ஒரு வகையில் இவர்கள் உலகப் பொது மனிதர்கள். அந்த வகையில், இவை நம் கதைகளும்கூட.****ஜெயந்தி சங்கர் சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு என்று பல தளங்களில் இயங்கிவரும் எழுத்தாளர். பல்வேறு மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். பல சிறுகதைத் தொகுப்புகளில் இஅμது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ‘நியாயங்கள் பொதுவானவை’ என்ற சிறுகதைத் தொகுப்பு ‘அரிமா சக்தி விருது 2006’ சிறப்புப் பரிசு, ‘மிதந்திடும் சுயபிμதிணிமகள்’ நூலுக்கு ‘நல்லி - திசையெட்டும் (மொழியாக்க) இலக்கிய விருது 2009’, ‘மனப்பிரிகை’ நாவலுக்கு - அரிமா சக்தி 2008 (சிறப்பு) விருது உள்ளிட்ட பல பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார்.