Description
முக்கியமான இந்திய சூஃபிகள் பலர் அறியப்படவேண்டிய அளவு பரவலாக அறியப்படாமலேயே இருக்கிறார்கள். ஹஸ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா அவர்களுள் ஒருவர்.
ஒரு மனிதர் ஒரே நேரத்தில் ஏதுமற்ற ஏழையாகவும் வளம் கொழிக்கும் அரசனாகவும் இருக்கமுடியுமா? ஒரே நேரத்தில் ஒருவர் பெறுபவராகவும் கொடுப்பவராகவும் இருக்கமுடியுமா? கொலைப்பட்டினி கிடக்கும் ஒரு மனிதர் ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு உணவளிக்கமுடியுமா? முடியும் என்று நிரூபித்தவர் சூஃபி ஹஸ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா.
அன்பு என்பதையும் பாடல் என்பதையும் கடவுள் என்பதையும் இவருக்கு ஒன்றுதான். அளவற்ற அருள், கடலளவு கருணை, மாசற்ற மனிதத்தன்மை ஆகியவற்றின் அபூர்வமான சங்கமம் இவர்.
எண்ணற்றோர் வாழ்வில் அதிசயிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் ஒரு ஞானியின் வாழ்வையும் பணிகளையும் எளிமையாக அறிமுகப்படுத்திஇருக்கிறார் ரூமி.
‘அடுத்த விநாடி’ என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். ஹோமர் எழுதிய ‘இலியட்’ எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர்.