Description
மனவெளியையும் புற உலகையும் பிரிக்கும் மிக மெல்லிய திரை விலகும் விபத்தை எதிர்கொள்ளும் ஒரு படைப்பாளியின் மன அழுத்தம் ஒருபக்கம். இந்த நாணயத்தின் மறுபக்கமான அவனது கதாபாத்திரங்கள் சமகால வாழ்வின் விடையில்லாக் கேள்விகளை எதிர்கொள்ளும் சித்தரிப்பே இந்தப் புதினம். சத்யானந்தனின் முள்வெளி நாவலில் கவிதை, சிறுகதை, நாவல் என்னும் மூன்று வடிவங்களும் சங்கமிக்கின்றன.*பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சதங்கை, கணையாழி, நவீன விருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணைய-தளங்களிலும் தீவிரமாகத் தனது படைப்புகளைப் பிரசுரித்துள்ளார் கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன். நவீன புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைப்பவர்.