மறைக்கப்பட்ட பக்கங்கள்

Save 14%

Author: கோபி சங்கர்

Pages: 296

Year: 2018

Price:
Sale priceRs. 300.00 Regular priceRs. 350.00

Description

பால், பாலினம், பாலின ஒருங்கிணைவு குறித்த புரிதல் இந்தியச் சமூகத்தில் மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் பாலினச் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் சொல்லில் அடங்காதவை. இச்சமூகத்தினர் குறித்த விழிப்புணர்வு உருவாவது மிகவும் தேவையான ஒன்று.பாலினச் சிறுபான்மையினர் பற்றியும், உலகளாவிய வரலாறு மற்றும் தொன்மத்தில் அவர்களது இருப்பைக் குறித்தும், பங்களிப்பைப் பற்றியும் விரிவாக இப்புத்தகத்தில் விளக்கி இருக்கிறார் கோபி ஷங்கர்.இண்டர்செக்ஸ் நபரான (இடையிலிங்கத்தவர்) கோபி ஷங்கர் இந்நூல் மூலம் சொல்ல விரும்புவது ஒன்றைத்தான், ‘பாலினச் சிறுபான்மையினரும் எல்லோரையும் போன்ற மனிதர்களே.’ மிக எளிமையான இந்த உண்மையை இச்சமூகம் அவிழ்க்கவே முடியாத சிக்கலாக்கி வைத்திருக்கிறது. அச்சிக்கலுக்கான தீர்வின் முதல் படியே இந்தப் புத்தகம்.இது சிலரை அதிர்ச்சியடைய வைக்கலாம். பலருக்குச் சங்கடத்தை அளிக்கலாம். பலரது மதிப்பீடுகளையும் நம்பிக்கைகளையும் அடியோடு தகர்க்கவும் செய்யலாம். உண்மையில் இந்தப் புத்தகம் அவர்களுக்காகவும்தான். ஏனென்றால், இவர்களது உலகைப் புரிந்துகொள்ளாமல் உங்களுடைய எந்தப் புரிதலும் முழுமையடையப் போவதில்லை.

You may also like

Recently viewed