எம்டன் செல்வரத்தினம்: சென்னையர் கதைகள்


Author: தொகுப்பு

Pages: 144

Year: 2017

Price:
Sale priceRs. 195.00

Description

கிழக்கு பதிப்பகம் 2017ம் ஆண்டு நடத்திய ‘சென்னை சிறுகதைப் போட்டி’யில் தேர்வு பெற்ற கதைகளின் தொகுப்பு.* எழுதுவார் எழுதினால் சலவைத்துணிக் கணக்கும் சிறுகதைதான். சிறுகதைகளை உயிர்த்திருக்கச் செய்யும் முயற்சியில் எடுத்து வைத்த சிறு சிறு செங்கற்களாகவே கிழக்கு பதிப்பகத்தில் சென்னைச் சிறுகதைப் போட்டிக்கு எழுதப்பட்ட எல்லாச் சிறுகதைகளையும் கருதுகிறேன். சென்னைக்குச் சிறுகதை இலக்கியப் புகழாரம் சூட்டப்படாத வசை கிழக்கு பதிப்பகத்தின் இந்தச் சென்னைத் தொகுப்பின் மூலம் சற்றே தீர்ந்தது. சிறுகதைத் தொகுப்பாகப் பிரசுரமாகும் இந்தக் கதைகள், சிறுகதைக்கு ஆயுள் ரேகை தீர்க்கமாக இருப்பதைத் தெள்ளெனத் தெரிவிப்பவையாக அமைகின்றன. சென்னைக்காரராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் படிக்க வேண்டியவை இக்கதைகள்.- இரா. முருகன்* சென்னையை மையமாக வைத்து எழுதப்படும் சிறுகதைகள் காலவெள்ளத்தில் கல்வெட்டாக மாறுகின்றன. அந்தந்தக் காலகட்டத்தின் ஆவணமாகப் பரிணமிக்கின்றன. புதுமைப்பித்தனில் ஆரம்பித்துப் பலரும் சென்னை வாழ்க்கையைச் சிறுகதையில் பதிவு செய்திருக்கிறார்கள். அனைவரது கதைகளிலும் சென்னையின் வெக்கையும், வாசனையும், துரோகமும், வன்மமும், அன்பும் இருப்பதாகவே நம்புகிறேன். கிழக்கு பதிப்பகம் நடத்திய‘சென்னை சிறுகதைப் போட்டி’யில் பங்கேற்ற அனைவருமே ‘கதை’யை எழுதவில்லை. மாறாக, வேறெந்த ஊருக்கும் / நகருக்கும் பொருந்தாத, சென்னைக்கு மட்டுமே உரிய தருணங்களை / கணங்களை / வெடிப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். - கே.என். சிவராமன்

You may also like

Recently viewed