Description
விற்பனைத் துறையில் பெரும் சாதனைகள் புரிய ஓர் எளிமையான, சுவாரஸ்யமான கையேடு!· விற்பனைத் துறை எப்படிச் செயல்படுகிறது? அதில் இணைவது எப்படி?· இத்துறையில் என்னென்ன சிக்கல்கள், சவால்கள், வாய்ப்புகள் உள்ளன? அவற்றை எப்படிக் கையாள்வது?· உங்கள் மேலாளரின் நம்பிக்கையைப் பெறுவது எப்படி? எந்தவொரு குழுவிலும் சிக்கலின்றி பணியாற்றுவது எப்படி?· பேச்சு, எழுத்துத் திறனை வளர்த்துக்கொள்வது எப்படி?· வாடிக்கையாளரைப் புரிந்துகொள்வது எப்படி? அவருடைய தேவைகளை உணர்ந்து, பூர்த்தி செய்வது எப்படி?· பேரங்களை வெற்றிகரமாக நடத்திமுடிக்கும் கலையை எப்படிக் கற்றுக்கொள்வது?· இலக்குகளை அடைவது எப்படி? நெருக்கடிகளைச் சமாளிப்பது எப்படி?நீங்கள் விற்பனைத் துறையைச் சேர்ந்தவராக இருந்தால் அல்லது அதில் நுழையும் கனவு கொண்டிருப்பவராக இருந்தால், இந்தப் புத்தகத்தை நீங்கள் வாசித்தே தீர வேண்டும். 35 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனைத் துறையில் பணியாற்றிய தனது நீண்ட, நெடிய அனுபவத்தின் அடிப்படையில் இந்நூலை உருவாக்கியிருக்கிறார் சிவக்குமார். உங்களுடைய நிச்சயமான வெற்றிக்கு உத்தரவாதமளிக்கும் பாடங்கள் பல இதில் உள்ளன.