Description
இன்று அகதிகளாக மாறியிருக்கும் அனைவருமே நேற்றுவரை நம்மைப்போல் இயல்பாக இருந்தவர்கள்தாம். இன்று இயல்பாக இருக்கும் யார் வேண்டுமானாலும் நாளை அகதிகளாக உருமாறலாம். இது அச்சுறுத்தலோ அக்கறையுடன்கூடிய ஓர் எச்சரிக்கையோ அல்ல, நிதர்சனம்.முக்கியமான இரு கேள்விகளுக்கு விடை தேடுவதே இந்நூலின் பிரதான நோக்கம். அகதிகளை நாம் எப்படிக் காண்கிறோம்? அகதிகளின் கண்களைக்கொண்டு பார்த்தால் நாம் எப்படித் தோற்றமளிப்போம்?இராக், ஆப்கனிஸ்தான், சிரியா, பாலஸ்தீன், இலங்கை, பர்மா என்று பல நாடுகளிலிருந்தும் எறும்புக் கூட்டங்களைப் போல் இலக்கின்றி வெளியேறிக்கொண்டிருக்கும் அகதிகளின் வலிமிகுந்த வாழ்க்கைப் பதிவு இது. முக்கியத்துவம் கருதி ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்துத் தனிக்கவனம் செலுத்தி ஆராயப்பட்டுள்ளது.ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த தொடரின் விரிவாக்கப்பட்ட, செம்மைப்படுத்தப்பட்ட நூல் வடிவம்.