Businessil Tharkolai Seidhu Kolvathu Eppadi/பிசினஸில் தற்கொலை செய்து கொல்வது எப்படி?


Author: சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

Pages: 136

Year: 2019

Price:
Sale priceRs. 150.00

Description

என்னவெல்லாம் செய்தால் வெற்றி கிடைக்கும், அதை எப்படியெல்லாம் செய்தால் லாபம் கொழிக்கும் என்பதை எடுத்துச்சொல்ல ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. என்னவெல்லாம் செய்யக்கூடாது? அப்படிச் செய்தால் என்னாகும்? எத்தகைய தவறுகள் தொழில் வளர்ச்சியை பாதிக்கும்? எத்தகைய தவறுகள் நம்மையும் சேர்த்து முடக்கிப்போடும்? ஆகியவற்றை நேர்மையாக எடுத்துச் செல்லும் நூல்கள் அதிகமில்லை.இந்நூல் அதைத்தான் செய்கிறது என்பதால் ஒரு வகையில் இது உங்களுக்கான கசப்பு மருந்து. நீங்கள் எப்படியெல்லாம் மேலே மேலே உயரவேண்டும் என்றல்ல, எங்கெல்லாம் சறுக்குவீர்கள் என்பதைக் கவனத்துடன் இந்நூல் உங்களுக்குச் சுட்டிக்காட்டப்போகிறது.தெரிந்தும் தெரியாமலும் தொழிலில் தவறு செய்து தானும் தற்கொலை செய்துகொண்டு தன் தொழிலையும் கொல்லும் விதங்களை, விபரீதங்களை விவரிக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்.மார்க்கெட்டிங், பிராண்டிங் உலகின் முடிசூடா தாதாவாகத் திகழும் சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் இந்நூல் உங்களைத் தற்கொலையிலிருந்து தடுத்து நிறுத்தப்போகிறது. அதோ சிகரம் என்று உற்சாகப்படுத்துவதற்குப் பதில், ஐயோ பள்ளம் என்று அலறி உங்களைத் தடுத்தாளப்போகிறது. நிஜமாக வெற்றி என்பது எந்தக் கட்டத்திலும் தோல்வி அடையாமல் இருப்பதிலிருந்துதான் தொடங்குகிறது அல்லவா?

You may also like

Recently viewed