Ambedkarum Saathi Ozhippum/அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்

Save 10%

Author: கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா

Pages: 288

Year: 2019

Price:
Sale priceRs. 270.00 Regular priceRs. 300.00

Description

தமிழில்: பூ.கொ. சரவணன்அம்பேத்கர் குறித்து பல பதிவுகள் வெளிவந்திருந்தாலும், மூன்று முக்கியமான காரணங்களுக்காக இந்நூல் அவற்றிலிருந்து தனித்து நிற்கிறது.· அம்பேத்கரின் வாழ்க்கை, சிந்தனைகள் இரண்டையும் எளிமையாகவும் நேர்த்தியாகவும் இந்நூல் அறிமுகம் செய்கிறது.· ஒரு தலித் தலைவராக மட்டுமின்றி அம்பேத்கரின் பன்முக ஆளுமை மிக விரிவாக இதில் வெளிப்பட்டிருக்கிறது.· அம்பேத்கரின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் அறிவுப்பூர்வமாக ஆய்வு நோக்கிலும் விமரிசன நோக்கிலும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது.சாதியை அம்பேத்கர் எப்படி அணுகினார்? சாதியை அழிக்க முடியும் என்று அவர் நம்பினாரா? ஆம் எனில் எவ்வாறு? இந்து மதத்திலிருந்து அவர் வெளியேறியது ஏன்? பௌத்தத்தைத் தழுவிக்கொண்டது ஏன்? ஜனநாயகம், பாகிஸ்தான், மதச்சார்பின்மை, இந்தியப் பிரிவினை, கம்யூனிசம், வகுப்புவாதம், சமூகநீதி ஆகியவை பற்றிய அம்பேத்கரின் பார்வை என்ன? தலித்துகளின் அரசியல் நுழைவுக்கும் எழுச்சிக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்ன?அவர் மேற்கொண்ட போராட்டங்கள் என்னென்ன? அம்பேத்கர் இன்று நமக்கு ஏன் தேவைப்படுகிறார்? அரசியல் ஆய்வாளர் கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலாவின் Ambedkar and Untouchability : Analysing and Fighting Caste என்னும் புகழ்பெற்ற நூலை அழகிய, தெளிவான நடையில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.பூ.கொ. சரவணன். தமிழ் வாசிப்புலகுக்கு இந்நூல் ஓர் அறிவார்ந்த ஆயுதம்.

You may also like

Recently viewed