Velvi/வேள்வி


Author: சவுக்கு சங்கர்

Pages: 304

Year: 2019

Price:
Sale priceRs. 350.00

Description

அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுங்கள்; அநீதியைக் கண்டால் தட்டிக் கேளுங்கள்; உண்மையைவிட வலிமையான ஆயுதம் வேறில்லை; உலகமே எதிர்த்தாலும் துணிந்து நில்லுங்கள். இப்படியெல்லாம் சொல்லிப் பார்த்துக்கொள்ளும்போது உத்வேகம் ஏற்படுவது உண்மைதான். ஆனால் இந்த உத்வேகத்தை மட்டும் வைத்துக்கொண்டு நிஜமாகவே போராட ஆரம்பிக்கும்போது கனவு கலைந்துபோகிறது. யதார்த்தம் முகத்தில் வந்து அறைகிறது. உணர்ச்சி வேகத்தில் தவறு செய்துவிட்டோமே என்று மனம் படபடக்கிறது.உண்மையை, நீதியை, தர்மத்தை, துணிவை உயர்ந்த விழுமியங்களாக உயர்த்திப் பிடிப்பவர்களைக் கண்டு சலிப்பும் எரிச்சலும் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை. இது ஒரு சாமானியனின் கதை. விழுமியங்கள் மீது வலுவான நம்பிக்கை கொண்டிருக்கும் ஒருவனின் கதை. உண்மையை ஓர் ஆயுதமாகத் தரித்துக்கொண்டு அதிகாரத்தை எதிர்க்கத் துணிந்த ஒருவனின் கதை.நீதியும் நியாயமும் கற்பிதங்கள் அல்ல, மனிதர்களை மனிதர்களாக வைத்திருக்க அவை அவசியம்; உயிரைக் கொடுத்தேனும் அவற்றைக் காக்கவேண்டும் என்று துடிக்கும் ஓர் இளைஞனின் கதை. இது போராட்டத்தின் கதை. முடிவில்லாமல் நீண்டுசெல்லும் ஒரு வேள்வியின் கதை.இது சவுக்கு சங்கரின் முதல் நாவல். அதிகார வர்க்கத்தால் வேட்டையாடப்பட்ட ஓர் அதிகாரியின் போராட்டக் கதையை விவரிக்கும் இவருடைய முந்தைய நூலான, ‘ஊழல் உளவு அரசியல்’ மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அது உண்மைக் கதை என்றால் வேள்வி ஒரு புனைவு. இருந்தும் இரண்டின் அடிப்படையும் ஒன்றுதான். வாழ்க்கை என்பது போராட்டமே.

You may also like

Recently viewed