அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை

Save 6%

Author: டி.தருமராஜ்

Pages: 391

Year: 2024

Price:
Sale priceRs. 470.00 Regular priceRs. 500.00

Description

இந்த அளவுக்கு விரிவாகவும் ஆழமாகவும் அயோத்திதாசர் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை. சாத்தியமாகக்கூடிய அத்தனை கோணங்களிலும் அயோத்திதாசரை அணுகி, நுணுக்கமாக ஆராயும் இப்படியொரு நூல் வெளிவந்ததில்லை. அயோத்திதாசர் தனி மனிதரல்ல, ஒடுக்கப்பட்டவர்களின் சுயம். அடையாளமற்றவர்களின் ஆவேசம். நூற்றாண்டுகளாகத் தாழ்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் குரலற்ற பெருந்திரளின் நமட்டுச் சிரிப்பு. அயோத்திதாசர் மீது படிந்திருந்த கனமான பண்டிதத் திரையை விலக்கி அவரை ஒரு மானுடராக வெளிப்படுத்தியதில் டி. தருமராஜின் பங்களிப்பு முதன்மையானது. அரசியல் கட்சிகள் தொடங்கி ஆய்வாளர்கள் வரை பலரும் அயோத்திதாசரைத் தங்களுடைய ஆதர்சமாக வரித்துக்கொண்டது அதற்குப் பிறகுதான். பார்ப்பனர்கள் அதிகாரமிக்கவர்களாக மாறியது எப்படி? பறையர் என்னும் சொல் எப்படித் தோன்றியது? பூர்வ பௌத்தர்கள் யார்? திராவிட இயக்கத்துக்கும் அயோத்திதாசருக்கும் என்ன உறவு? பெரியார் , அயோத்திதாசருக்கு எதிரானவரா? அயோத்திதாசர் சொல்லும் பல கதைகளை ஆய்வுலகம் ஏற்றுக்கொள்கிறதா? சாதி ஆதிக்கத்தை எதிர்த்த அயோத்திதாசருமேகூட அருந்ததியரைக் கீழாகத்தான் பார்த்தார் என்பது உண்மையா? அம்பேத்கரை அயோத்திதாசரோடு இணைத்து வாசிக்கலாமா? இன்றைய காலகட்டத்துக்கு அயோத்திதாசர் ஏன் தேவை? பண்பாட்டு வரலாற்றையும் வாய்மொழிக் கதைகளையும் இழைத்து கற்பனையையும் நிஜத்தையும் கலந்து அயோத்திதாசர் கட்டமைத்த ஓர் அசாதாரணமான உலகை ரத்தமும் சதையுமாகக் கண்முன் நிறுத்துகிறது இந்நூல். மொழியியல், தத்துவம், தொன்மவியல், மானுடவியல், நாட்டார் வழக்கியல், சமூகவியல், பண்பாட்டு வரலாறு, உளவியல் என்று பல திசைகளில் தன் ஆய்வை விரித்துச் சென்று ஒவ்வொன்றிலிருந்தும் சிறு வெளிச்சங்களை அள்ளிக்கொண்டுவந்து இந்நூலில் ஒன்று குவிக்கிறார் டி. தருமராஜ். வெளிச்சத் துண்டுகள் ஒன்றிணைந்து மாபெரும் ஜோதியாகத் திரண்டெழும்போது இதற்குமுன்பு சாத்தியப் படாத பிரமாண்டத்துடன் உயிர்பெற்று வெளிப்படுகிறார் அயோத்திதாசர்.

You may also like

Recently viewed