Description
நம் தேசத்துக்கு சுதந்தரம் கிடைத்ததும் என்னவிதமான கல்வி தரப்படவேண்டும் என்று காந்தியும் காந்தியவாதிகளும் கூடிக் கலந்தாலோசித்து 1937 வாக்கில் உருவாக்கிய கல்வித் திட்டம் இது.
கைத் தொழில் வழியிலான கல்வி என்று சுருக்கமாகச் சொல்லலாம். தச்சு வேலை, நெசவு, தோட்டப் பணிகள், பானை வனைதல் என பல்வேறு கலைகளினுடாக கணிதம், மொழிப்பாடம், சமூகவியல், அறிவியல் என அனைத்துப் பாடங்களைக் கற்றுக் கொடுப்பது தொடர்பான ப்ளூ பிரிண்ட். ஜாஹிர் ஹுசேன், ஜே.சி.குமரப்பா, வினோபா பாவே, அரிய நாயகம் போன்ற காந்தியவாதிகள் ஒன்று கூடி உருவாக்கிய லட்சியக் கல்வித் திட்டம்.
நம் தேசத்தின் கல்வித் திட்டத்தை வடிவமைத்தவர்கள் இந்தக் கல்வித் திட்டத்தில் இருந்து எதையேனும் ஆக்கபூர்வமான முறையில் நடைமுறைப்படுத்தியிருந்தால் நம் தேசம் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே என்ற ஏக்கத்தை உருவாக்கும் கடந்த காலக் கனவின் வரைபடமாகவும் இந்த நூல் விளங்குகிறது.