பெளத்த இந்தியா

Save 8%

Author: T.W.ரீஸ் டேவிட்ஸ் தமிழில் அக்களூர் ரவி

Pages: 288

Year: 2023

Price:
Sale priceRs. 300.00 Regular priceRs. 325.00

Description

பழங்கால இந்தியாவில் பௌத்தம் மிகவும் செல்வாக்குடன் இருந்த காலம் பற்றி ஆங்கிலத்தில் விவரிக்கும் முதல் முயற்சி இந்தப் புத்தகம்' என்று தனது நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் பிரிட்டிஷ் பௌத்த ஆய்வாளர் T.W.ரீஸ் டேவிட்ஸ். ஒரு வகையில் பௌத்த ஆய்வுகளுக்கெல்லாம் அடித்தளம் அமைத்துக்கொடுத்த முன்னோடியான நூல் என்றும் இதனை மதிப்பிடமுடியும்.

பெளத்தம் செழிப்புற்றிருந்த பண்டைய இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூக வரலாற்றை வழக்கமான பிராமணர்களின் பார்வையிலிருந்து அல்லாமல் இலக்கியம், நாணயவியல், கல்வெட்டியல் உள்ளிட்ட துறைகளிலிருந்து பெற்ற சான்று களின் அடிப்படையில் இந்நூல் ஆராய்கிறது.தரவுகளற்ற இருண்ட காலமாகக் கருதப்பட்ட பண்டைய இந்தியாவின்மீது வெளிச்சம் பாய்ச்சுவதோடு சந்திரகுப்தர், அசோகர், கனிஷ்கர் போன்ற வண்ணமயமான மன்னர்களின் பௌத்தப் பங்களிப்புகளையும் முறையாக விவரிக்கிறது.

பௌத்தத்தின்மீது ஆர்வமும் பிடிப்பும் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான முக்கியமான நூலைச் சீராகவும் சரளமாகவும் மொழிபெயர்த்திருக்கிறார் அக்களூர் இரவி.

You may also like

Recently viewed