Description
தி. ஜானகிராமனின் ‘கருங்கடலும் கலைக்கடலும்’ பயண இலக்கியம். தி. ஜானகிராமன் பண்பாட்டு பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தது பற்றி எழுதிய பயணக் கதை. சோமலெ, ஏ.கே. செட்டியார் போன்ற பயணக்கட்டுரை எழுத்தாளர்களின் பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது தி. ஜானகிராமனின் பயணம் பற்றிய எழுத்து. அடிப்படையில் தி.ஜா. புனைகதை எழுத்தாளர் என்பதால் தனது அனுபவங் களைக் கதையாகவே சொல்லிக்கொண்டு போகிறார். அவர் சென்ற நாடுகளின் பூகோளரீதியான தகவல்கள் இந்த நூலில் இல்லை. தி.ஜா. தனக்கே உரிய பாணியில் அந்த நாடுகளை நம்மைக் காணவைக்கிறார்.