இக்குறிப்புகள் சாதாரணக் குடும்ப அரசியலில் சிக்குண்ட பெண் எழுதும் மனக்குறைகள் அல்லது புலம்பல்கள் என்ற தளத்திலிருந்து இந்தப் பிரதியை வெகுவாக உயர்த்துகிறது. பிரதியின் ஆழத்தையும் அதைப் பகிர்ந்துகொள்ள நினைக்கும் விழைவையும் அதில் தொக்கி நிற்கும் இறைஞ்சலையும் நம்மால் உணரமுடிகிறது.