Description
இந்த நூல் திருக்குறள் தெளிவுரை அல்ல; விளக்கவுரையும் அல்ல. பிறிதொன்றிற்கு உவமம் தானல்லது தனக்கு உவமம் பிறிதில்லாத திருக்குறளை முன்னிருத்தி அதனோடு ஒப்புமை உடைய நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி, திரிகடுகம், ஆசாரக்கோவை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, போன்ற பிற அற நூல்களின் கருத்துகளையும் இந்த வேலியற்ற வேதம் என்ற எனது நூலில் தொகுத்து வழங்கியுள்ளேன். இந்த நூலினுள் சென்றால் ஆசான் வள்ளுவரும் ஒளவைப்பிராட்டியும் செந்நாப்போதாரும் செந்தமிழ் பாரதியும், தெய்வப்புலவனும், தேன்தமிழ்க் கம்பனும் கைகோர்த்து வலம் வருவதைக் காண்பீர்கள்.குற்றங்கள் மலிந்து அறம் அருகிவிட்ட இக்காலத்திற்கு இந்நூல் பயன்படும் என்று நம்புகிறேன்.- வரலட்சுமி மோகன்.