இடி முழக்கம்:அ.இரகுமான்கான் சட்டமன்றப் பேருரைகள்

Save 5%

Author: பேராசிரியர் அ.முகமது அப்துல் காதர்

Pages: 0

Year: 2025

Price:
Sale priceRs. 570.00 Regular priceRs. 600.00

Description

தமிழக சட்டப்பேரவையில் திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினராக திரு. அ.இரகுமான்கான் அவர்கள் ஆற்றிய சட்டமன்ற பேருரைகள் அனைத்துமே தமிழக அரசியல் வரலாற்றில் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணமாகும். மரியாதைக் குரிய முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் வழியைப் பின்பற்றி, ஒவ்வொரு தருணத்திலும் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று சட்ட மன்றத்திலே திரு.அ.இரகுமான்கான் அவர்கள் ஆற்றிய பேருரைகள் தமிழக அரசியல் வரலாற்றில் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷ மாகும்.
சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதியாக இருந்து மாநில உரிமைகளை காப்பதில் ஓர் போர் வீரனை போல செயல்பட்டு, தமிழ்நாட்டின் நலனை பேணி பாதுகாக்க சட்ட மன்றத்தில் இடி முழக்கமாய் குரல் எழுப்பியும்,முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இதயக் குரலாகவும் திகழ்ந்திருக்கிறார் என்பதை அவருடைய சட்டமன்ற பேருரைகளை படிக்கும் போது உணரலாம்.
தமிழ்நாட்டின் தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும், தமிழர் களின் நலன் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். சமத்துவ சமுதாயம் உருவாக்க வேண்டும், என பல்வேறு தலைப்புகளில் சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய ஒவ்வொரு உரைகளும் எந்நாளும் தமிழ்நாட்டுக்கும், தமிழ் சமூகத்திற்கும் வழிகாட்டும் கால கண்ணாடிகளாகும்.

அரசியலில் தடம் பதிக்க வேண்டும் என்ற இலக்குடன் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய இன்றைய இளைய சமுதாயம் படிக்க வேண்டிய அரசியல் பயிற்சி புத்தகம் தான் திரு. அ.இரகுமான்கான் அவர்களின் சட்டமன்ற பேருரைகள் என்பதில் ஐயமில்லை. இந்த நூலை இளைஞர்கள், மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டும். பாதையை போட்டுக் கொடுத்தால் பயணம் செய்வது மிகவும் சுலபம், அப்படி அறம் சார்ந்த அரசியல் பாதையை போட்டுக் கொடுத்தவர் தான் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்... அந்த பாதையை பின்பற்றி திரு.இரகுமான்கான் ஆற்றிய உரைகள் இன்றைய மன்றத்திலும் ஒலிக்கப்பட வேண்டியவை யாகும்.

You may also like

Recently viewed