Author: பா.தீனதயாளன்

Pages: 336

Year: 2024

Price:
Sale priceRs. 555.00

Description

'

என் வழி தனி வழி' என்று திரையிலும் வாழ்விலும் உண்மையாகவே வாழ்ந்து நிரூபித்தவர் கேப்டன்! ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாக இருந்தாலும், அடித்தட்டு மக்களின்
அவலம் அறிந்து துணை நின்றவர் அரிதாரம் பூசிய முகத்துக்கும். அனுதினமும் காணும் முகத்துக்கும் ஒரு வித்தியாசம்கூட இல்லாமல் ஒருவரால் வாழ முடியும் என்றால் அப்படிப்பட்ட ஒரே அதிசயப் பிறவி விஜயகாந்த் மட்டுமே! விஜயகாந்த் அளவுக்கு நிராகரிப்புகளைச் சந்தித்த இன்னொரு கலைஞன் இருக்க முடியாது. சிறிய தியேட்டரில் காலைக்காட்சியிலாவது தன் படம் ஓடுமா என்ற நிலையில் இருந்தவர். பூஜை போட்ட அன்றே படத்தை வாங்க விநியோகஸ்தர்கள்
அடிதடியாக மோதிக் கொள்ளும் அளவுக்கு உயரத்திலும் நிலைத்தவர், கமலையும் ரஜினியையும் தாண்டி தனக்கென தனி
ரசிக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர். 

கோடம்பாக்கத்தின் சரித்திரத்தில் விஜயகாந்தின் பக்கங்கள் தன்னிகரற்றவை! தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்த நட்சத்திரம். வெற்றி தோல்விகளைக் கடந்து ரசிகர்கள் மனத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்த நாயகன். வெள்ளந்தித்தனமும் வீராவேசமும் கலந்த ஆளுமை அரசியலிலும் அதிர்வுகளை உண்டாக்கிய தலைவன். எல்லா தரப்பு மக்களின் அன்பையும் சம்பாதித்த கேப்டன். நம்கண் முன்னாலேயே வாழ்ந்து மறைந்த வள்ளல். பா. தீனதயாளன் எழுத்தில் விஜயகாந்தின் வாழ்க்கையை வாசிப்பது என்பது அந்த ஈடு இணையற்ற மனிதனின் வாழ்க்கையை நாம் இன்னொரு முறை வாழ்ந்து பார்ப்பதற்கு இணையானது.

You may also like

Recently viewed