Description
புகழ்பெற்ற அள்ள அள்ளப் பணம் நூல் வரிசையில் மற்றொரு முக்கிய வரவு. நிதி மேலாண்மையில் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு தொடக்கப் புள்ளி மட்டும்தான். சம்பாதித்த பணத்தை எப்படிப் பாதுகாப்பது? சேமிக்கும் பணத்துக்கு ஆபத்து நேர்ந்தால் அதை எவ்வாறு எதிர்கொள்வது? இழப்பைச் சந்திக்கவேண்டியிருந்தால் அதை எப்படி ஈடுகட்டுவது? இவற்றையெல்லாம் முன்கூட்டியே யூகித்து, முன்னெச்சரிக்கையோடு திட்டங்கள் வகுப்பது சாத்தியமா? இந்தக் கேள்விகளை எழுப்புவதும் அவற்றுக்கான விடைகளைத் தயாராக வைத்துக்கொள்வதும் இன்றைய சூழலில் தவிர்க்கமுடியாதவை மட்டுமல்ல, தவிர்க்கக்கூடாதவையும்கூட. பங்குச் சந்தை, பரஸ்பர நிதிகள் ஆகியவை பெறும் கவனத்தை காப்பீடு பொதுவாகப் பெறுவதில்லை. நடுத்தர வர்க்கத்தினரேகூட காப்பீடு பற்றி மிகவும் மேலோட்டமாகவே தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையை மாற்றுவதே இந்நூலின் நோக்கம். ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு என்று தொடங்கி அதிகம் அறியப்படாத பயணக் காப்பீடு, விபத்துக் காப்பீடு என்று பலவகையான காப்பீடுகளை விரிவாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன்.