வளர்ச்சி என்பது தானே நிகழ்வதல்ல. சீராகத் திட்டமிட்டு, படிப்படியாக நிகழ்த்தப்படுவது. நல்ல நிர்வாக, மேலாண்மைத்திறன் இருப்பவர்களால் அவர்கள் விரும்பும் வளர்ச்சியை நிச்சயம் முன்னெடுக்கமுடியும். சிறு, குறு தொழிலில் ஈடுபடுபவர்கள் தொடங்கி மாபெரும் நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்கள்வரை அனைவருக்கும் பொருந்தும் பொது விதி இது.
நிதி மேலாண்மையை எவ்வாறு சிறப்பாகச் செய்வது? நெட் வொர்க்கிங் திறனை எப்படி வளர்த்துக்கொள்வது? வர்த்தக வெற்றிக்குத் தேவையான பேச்சுக்கலையை எவ்வாறு வளர்த்துக்கொள்வது? புள்ளி விவரங்களை எவ்வாறு கையாள்வது? எப்படி நேரத்தை நிர்வகிப்பது? குழுவில் உள்ளவர்களோடு எப்படி இணைந்து பணியாற்றுவது? ரிஸ்க் எப்போது எடுக்கலாம், எப்போது எடுக்கக்கூடாது? சரியான இலக்குகளை நிர்ணயித்துக்கொள்வது எப்படி?
நிர்வாகம், நிதி மேலாண்மை, மனித வள முன்னேற்றம் ஆகிய துறைகளில் ஆழமான அனுபவம் பெற்ற சோம. வள்ளியப்பனின் இந்நூல் வளர்ச்சிக்கான பிராக்டிகல் வழிகாட்டியாகத் திகழ்கிறது.
சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் போதும். சின்னச் சின்ன மாற்றங்களை முன்னெடுத்தால் போதும். உங்கள் ஒவ்வொரு நகர்வும் சிக்ஸர்தான் என்று நம்பிக்கையூட்டுகிறார்சோம. வள்ளியப்பன்