Description
ஆயிரமாண்டுக்கு முந்தைய ஒரு கொடூரக் கொலை வழக்கு இப்பிரம்மாண்ட நாவலில் துப்பறியப்படுகிறது. ஆதித்த கரிகாலன் என்ற சோழத்து இளவரசனின் துர்மரணத்தின் மர்மத்தில் ஒளிந்திருப்பது சாவுக்கான பழிவாங்கலா, அரியணைக்கான பேராசையா, காதல் துயரின் வன்மமா அல்லது அதிகாரத்துக்கான வேட்கையா என்ற வினாவைத் தமிழ் வாசகப் பரப்பு தொடர்ந்து விவாதித்துக் கொண்டே இருக்கிறது. காலாதீதமாக மௌனித்து நிற்கும் கல்வெட்டுகளின் இடைவெளிகளில் கற்பனையைப் பாய்ச்சி கண் கூசும் அந்த உண்மையை நெருங்கிக் காண எத்தனிக்கிறது இந்த வரலாற்றுப் புதினம்!