Description
பொன்னியின் புதல்வர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வையும் பணிகளையும் சுவையாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்தும் முக்கியமான நூல். ஓர் ஆளுமை குறித்த சித்திரமாக மட்டுமின்றி அவர் இயங்கிய காலத்தைப் படம்பிடித்துக் காட்டும் ஓர் ஆவணமாகவும் இந்நூல் திகழ்வது அதன் சிறப்பு.
காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டது, சுதந்தரப் போராட்டத்தில் இணைந்துகொண்டது, பத்திரிகை உலகத்துக்குள் பிரவேசித்தது, புதிய எழுத்துப் பாணியை உருவாக்கியது, படிப்படியாக அந்த உலகின் கதாநாயகனாக மாறியது என்று கல்கியின் வாழ்வில் ஒவ்வொரு அத்தியாயமும் நம்மைத் திகைப்பில் ஆழ்த்துபவை.
காலத்தில் என்றென்றும் நிலைத்திருக்கப்போகும் படைப்புகளை அருளியிருக்கும் ஒரு மகத்தான எழுத்தாளரை நெருக்கமாகத் தெரிந்துகொள்ள இந்நூல் உதவும்.