மண்ணின் மைந்தர்கள்


Author: பொ.சங்கர்

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 220.00

Description

மனிதர்களை மறக்கும்போது நாம் மண்ணை மறந்து போகிறோம். மண்ணை மறக்கும்போது நம் மொழி, வரலாறு, மரபு, தொன்மம், கனவு அனைத்தையும் மறக்கிறோம். மனிதர்களையும் மண்ணையும் சேர்த்துக் கொண்டாடும்போதுதான் நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுகிறது. மொழி, சமயம், அரசியல், சமூகம், சூழலியல் என்று தொடங்கி நம் வாழ்வைச் சிந்தனைகளாலும் செயல்பாடுகளாலும் வளப்படுத்திய சில முக்கியமான ஆளுமைகள் இந்நூலில் நினைவுகூரப்பட்டிருக்கிறார்கள். குன்றக்குடி அடிகளார், கக்கன், ஜீவா, ஜி.டி. நாயுடு, நல்லகண்ணு, நம்மாழ்வார், பிட்டி தியாகராயர், வா.செ. குழந்தைசாமி, தவத்திரு பேரூரடிகளார் உள்ளிட்டோரின் வாழ்வும் அவர்தம் சமூகப் பங்களிப்புகளும் செறிவான முறையில் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களின்றி நாமில்லை. நம் எதிர்காலம் இல்லை. இன்னும் பரவலாகவும் இன்னும் அழுத்தமாகவும் இவர்களுடைய வரலாறு திசையெங்கும் எடுத்துச் செல்லப்படவேண்டும். அதற்கான உந்துதலை பொ. சங்கரின் இந்நூல் வழங்கட்டும்!

You may also like

Recently viewed