Description
இது 9000 சுலோகங்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இருந்தபோதிலும் தற்போது 6680
சுலோகங்களே அச்சில் காணப்படுகின்றன. இந்த நூலில் 134 அத்தியாயங்கள் உள்ளன. மார்க்கண்டேயர் தனது சீடனாகிய க்ரௌஷ்டி என்பவனுக்கு இந்த புராணத்தை உபதேசித்தார். அவரது பெயரால் இது ‘மார்க்கண்டேய புராணம்’ என்ற பெயரைப் பெற்றது. மார்க்கண்டேய புராணத்தில் மார்க்கண்டேயருடைய சரித்திரம் காணப்படவில்லை என்பது ஆச்சரியமான உண்மை. ஆகவே நான் நூலின் முன்னே மார்க்கண்டேயருடைய சரித்திரத்தை எழுதி சேர்த்திருக்கிறேன். இதில் பதினான்கு மந்வந்தரங்களைப் பற்றிய சரித்திரமே விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. 78 முதல் 90 வரையிலான பதின்மூன்று அத்தியாயங்கள் ஸ்ரீதேவி மகாத்மியத்தைப் பற்றித் தெரிவிக்கிறது. மந்வந்தரங்களைப் பற்றிய சரித்திரத்தை இதில்சுருக்கமாகக் கொடுத்திருக்கிறேன். அதைப் படிப்பதால் அடையும் பலன்களும் தரப்பட்டுள்ளன. படித்துப் பயன்பெறவும்.

