மனப்போக்குதான் எல்லாம்

Save 6%

Author: PSV குமாரசாமி

Pages: 168

Year: 2021

Price:
Sale priceRs. 235.00 Regular priceRs. 250.00

Description

உங்களுடைய கண்ணோட்டம் எதிர்மறையானதாக இருந்தாலும் சரி, நேர்மறையானதாக இருந்தாலும் சரி, அல்லது இவ்விரண்டுக்கும் இடையே ஏதோ ஒரு நிலையில் இருந்தாலும் சரி, ஊக்குவிப்புப் பேச்சாளரும் பயிற்றுவிப்பாளருமான ஜெஃப் கெல்லர், உங்களுக்குள் ஒளிந்திருக்கின்ற ஆற்றலை எப்படி நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என்பதையும், அந்த ஆற்றலை எவ்வாறு கட்டவிழ்த்துவிடுவது என்பதையும் சக்தி வாய்ந்த மூன்று வழிகளின் வாயிலாக உங்களுக்குக் காட்டுவார். சிந்தனை! மனத்திலிருந்துதான் வெற்றி தொடங்குகிறது. மனப்போக்கின் சக்தியால் உங்கள் தலைவிதியை மாற்றியமைக்க முடியும். பேச்சு! உங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை உன்னிப்பாக கவனியுங்கள். நீங்கள் பேசுகின்ற விதத்தால் உங்களுடைய இலக்குகளை நோக்கி உங்களை உந்தித் தள்ள முடியும். செயல்பாடு! ஓய்ந்து உட்காராதீர்கள்! உங்களுடைய கனவுகளை எதார்த்தமாக மாற்றக்கூடிய திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். விரைவில், நீங்கள் புத்துணர்ச்சியூட்டப் பெறுவீர்கள், புதிய சாத்தியக்கூறுகளைப் பார்ப்பீர்கள், பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு முறியடிப்பீர்கள், உங்களுக்கே உரிய தனித்துவமான திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். உங்களுடைய வேலையிலும் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் உங்கள் உறவுகள் மேம்படும். உங்களுக்குத் தேவையானதெல்லாம், உங்களுடைய மனப்போக்கையும் உங்களுடைய வாழ்க்கையையும் மாற்றுவதற்கான முறையான செயற்திட்டம் மட்டுமே!

You may also like

Recently viewed