மழைப்பாடல் (வெண்முரசு நாவல்-2)


Author: ஜெயமோகன்

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 2,000.00

Description

மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம். மழைபெய்தபடியே இருக்கும் புல்வெளியான யாதவ நாடு. காந்தாரியும் குந்தியும் இரு முனைகளாக நின்று மகாபாரதத்தின் பிரம்மாண்டமான சதுரங்கக் களத்தை அமைப்பதை விரிவாகச் சித்திரிக்கிறது. அவர்களுக்குப் பின்னால் அம்பிகையும் அம்பாலிகையும் சத்யவதியும் நின்றுகொண்டிருக்கிறார்கள். அன்னையர் உணர்ச்சிக்களத்தில் நிகழ்த்தி முடித்த போரைத்தான் பின்னர் மைந்தர் சமர்க்களத்தில் நிகழ்த்தினர் என்று சொல்லலாம். ஒவ்வொரு சிற்றோடையும் ஒன்றுடன் ஒன்று கலந்து நதியாக மாறி பெருகிச் செல்லும் மாபெரும் சித்திரத்தை உணர்ச்சிகரமான தருணங்கள் மூலமும் அழகிய கவித்துவம் வழியாகவும் காட்டுகிறது மழைப்பாடல். பாரதத்தின் நிலம், சமூகங்கள், வாழ்க்கைமுறை, சிந்தனைமுறைகள் அனைத்தையும் உள்ளடக்கி விரியும் பெரும் நாவல் இது. 1016 பக்கங்கள் கொண்ட நாவல் இது. 92 வண்ணப் புகைப்படங்களும் இந்நாவலில் உள்ளன.. முன்பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு: * இந்தியா முழுக்க தபால் செலவு இலவசம். எனவே ஆர்டர் செய்யும்போது தபால் செலவு இல்லாத வழியையே தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யவும். * முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு பதிவு எண் தரப்படும். அந்தப் பதிவு எண் கிடைக்கப்பெறதாவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொண்டு அதைப் பெற்றிடவேண்டும். * முன்பதிவு திட்டத்தில் ப்ரீ ஆர்டர், விபிபி கிடையாது. பணம் செலுத்தி பதிவு எண் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புத்தகம் அனுப்பப்படும். * செப்டம்பர் முதல் வாரத்தில் புத்தகம் அனுப்பி வைக்கப்படும். முதலில் பதிவு செய்தவர்களுக்கு முதலில் புத்தகம் அனுப்பப்படும். * ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் டயல் ஃபார் புக்ஸ் 94459 01234 ஐ அழைக்கலாம். * எம் ஓ, டிடி, செக் மூலம் பண அனுப்ப விரும்புகிறவர்கள் New Horizon Media Private Limited என்ற பெயருக்கு செக் அல்லது டிடி எடுத்து, New Horizon Media Private Limited, 177/103, Ambals building, Royapettah, Chennai - 600 014, Tamilnadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மறக்காமல் உங்கள் முகவரி, தொலைபேசி எண்ணோடு அனுப்பி வைக்கவும். * Money transfer செய்ய விரும்புபவர்கள் 94459 01234 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும். * வெளிநாட்டிலிருந்து ஆர்டர் செய்பவர்கள் அதற்கான ஷிப்பிங் சார்ஜையும் சேர்த்தே பணம் செலுத்தவேண்டும். * மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் nhm-shop@nhm.in என்ற முகவரிக்கு மடல் அனுப்பவும்.

You may also like

Recently viewed