Description
காலம் முழுவதும் காலனி ஆதிக்க நாடுகளிடம் தங்கள் குரல் வளையை கடித்து குதறும்படி யுத்தகளப்பலி அரவான்களாக ரத்தக் குளியலுக்கு ஆளானவர்கள் இந்த செவ்விந்தியர் கூட்டம். பல லட்சம் செவ்விந்தியர்களின் சடலங்களின் மீது தான் ஆரம்ப காலத்து பிரித்தானிய ஆதிக்கம், தனது அமெரிக்கா மீது தன்னுடைய சாம்ராஜ்யத்துக்கான உயிலை எழுதியது என்பது வரலாறு. சூது கவ்விய பகடை ஆட்டத்தில் உலக வரலாறு மன்னிக்காத இனப்படு கொலையோடு செவ்விந்தியர் பறிகொடுத்த ரத்தபூமி தான் அமெரிக்கா. தங்கள் மூதாதையரின் அஸ்திச் சாம்பல் மேட்டில் கட்டப்பட்டது தான் அமெரிக்க நாடு என்ற சொந்தமறியாது, செவ்விந்திய பூர்வீக குடிகள், இன்று திசை புரியாது வாழ்ந்து வருகின்றனர். இவ்வுலகின் முதல் அலறலோடு பரவிய குருதிப்புனலோட்டம், செவ்விந்திய இன அழிப்பில் தான் துவங்கியது... தங்கவேட்டையாடவும் மனித வேட்டையாடவும் காலனி ஆதிக்க நாடுகள், தங்கள் பூர்வீக மண்ணில் புகுந்தபோது எதிர்த்த செவ்விந்தியர் கூட்டம், காட்டுமிராண்டி கூட்டம் தான். மனித மாமிசம் உண்ணும் கூட்டம் தான். ஆனாலும் இப்பூர்வீக வீரமிக்கசெவிந்திய கலாச்சார பின்னணியின் குருதிப் பேரலையின் அதிர்வுகள், மறைக்கப்பட்ட இன்னும் நிறைய மானுட மர்மங்களை இவ்வுலகுக்கு தெரிவிக்கத் துடிக்கிறது என் நூலில்....

