Description
டிராகுலா (ரத்தக் காட்டேரி) ஒரு வேம்பையர். வேம்பையர் என்பது இறந்த பிறகும் உயிருடன் மற்றொரு உடலில் உலாவும் ஒரு பேய். ...கூர்மையான கடவாய் பற்கள்.. ரத்தம் தான் அவன் உணவு.. உள்ளங்கையில் மயிர் இருக்கும்.. வேறு உருவில் இருந்தாலும் கண்ணாடியில் அவன் உண்மை வடிவம் தென்படும்! மனித ரத்தத்திற்கான காட்டேரிகளின் பசி அவர்களின் பாலியல் பசிக்கு இணையானது. நடுநடுங்க வைக்கும் பேய்க்கதை டிராகுலா. கதை நிகழும் இடம் ட்ரான்ஸில்வேனியாவும் இங்கிலாந்தும், ஆசிரியர் பிராம் ஸ்டோக்கர் 7 ஆண்டுகள் மத்திய ஐரோப்பாவில் நிலவிய வேம்பையர் கதைகளையும் நாட்டுப்புறக் கதைகளையும் படித்து இந்த டிராகுலா கதையை ஆங்கிலத்தில் எழுதியதாக தெரிகிறது! இது திரைப்படமாக வந்த பிறகு உலகின் சிறந்த ஒரு பேய் கதையாக இந் நாவல் பல கோடிக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்டது ...அத்தனை விறுவிறுப்பு. ரத்தத்தை உறைய வைக்கும் சித்தரிப்புகள் ...ரத்தக்காட்டேரியின்' திகில் சக்ஷவாசகர்களை மூச்சு த்திணறலுக்கு கொண்டு சென்றது ..ரசிகர்கள் மற்றும் எழுத்தாளர்கள், ஒரு மேதமை மிக்க திகில் எழுத்தாளர் என்ற பெயரை பிராம்ஸ் டோக்கருக்கு ஏற்படுத்தினார்கள். வாசிக்கும் கணத்தில் குருதி அழுத்த உச்சமும், படபடப்பும் தமிழ் வாசகர்களுக்குள் ஏற்படுத்த ஆங்கிலத்தில் இருந்து மொழிமாற்றச் சுருக்கம் செய்துள்ளேன். என்றென்றைக்குமான திகில் நாவல் இது என்பதை ஒவ்வொரு வாசகனையும் உணரச் செய்யும் முயற்சியாக இம் மொழி பெயர்ப்பு இருக்கும் என கருதுகிறேன்.

