உதயமாகிறான் உதயசூரியன்


Author: ஜெகதா

Pages: 259

Year: 2024

Price:
Sale priceRs. 350.00

Description

தேர்தல் களத்தில் எங்கள் வீட்டுப் பிள்ளையாக தமிழ் இன மக்கள் தெருவெங்கும் அவரை உச்சி மோந்து கண்கலங்கியதாகட்டும் திரை உலகில் இளைய தலை முறையின் இதய கதாநாயகனாக வளம் வந்த வாழ்க்கையாகட்டும். உதயநிதியை தமிழகம். அரசியலுக்கு ஆச்சரியப்படத்தக்க என்றென்றும் அரவணைக்க உறுதி பூண்டுள்ள. ஒரு யதார்த்த புருஷனாக அவரை அடையாளப்படுத்தி முன்னிறுத்தியுள்ளதை எவரும் மறுக்கமுடியாது..... 'திராவிடம் என்பது விஷப்பாம்பை நடுநிலையாக்கும் திறன் கொண்டது என்பதை வட இந்தியர்கள் உணர்ந்துள்ளனர் என்று தான் உரைத்த சனாதன தர்மம் குறித்த வார்த்தை திரிபுகளுக்கு பதிலடி கொடுத்ததன் மூலம். இன்றைய விடிகாலை உதயசூரியனாக உதயமாகியுள்ளார் எங்கள் உதயநிதி என்று தமிழ்ச் சமுதாயம் பெருமிதம் கொள்கின்றது.திராவிட இயக்க வரலாற்றில் அடுத்த அத்தியாயம் உதயமாகி உள்ளது..தமிழ்நாட்டின் அடுத்த அரசியல் ஆளுமையாக உருவாக உதயநிதி ஸ்டாலினின் துணிச்சல் மிக்க நடவடிக்கைகளும் தெளிவான அணுகமுறையும் அச்சாரம் கூறுகிறது. திரையரங்குகளிலும் அரசியல் அரங்குகளிலும் இளைஞர்களை ஈர்த்தெடுத்து அவர் ஈட்டிய புகழும், செல்வாக்கும். திராவிட இயக்கத்தின் எதிர்காலத்தின் உதயம் இவர் என்று இன்றைய நிகழ்வுகள் கட்டியம் கூறுகின்றன...!அரசியல் சர்ச்சைகளைக் கண்டு பின்வாங்காமல் எதிர்கொள்ளும் துணிச்சலும், தெளிவும் அவருக்கான ஏணிப்படிக் கட்டுகளை விண்ணுயர நிறுத்தியுள்ளது...!குடும்பம். சமூகம். திரையுலகம், அரசியல் என பல பரிமாணங்களிலும் சுடர்விடும் தமிழகத்தின் இளைய தளபதியின் இன்று வரையிலான சுவாரஸ்ய பதிவுகளை நினைவுகூர்ந்து பரிமாறுதல் ஒரு சுவையான அனுபவமாக இந்நூல் உங்களுக்கு உணர்த்தும் என்று நம்புகிறேன்..!

You may also like

Recently viewed