Description
முப்பது ஆண்டுகால பத்திரிகை மற்றும் அல்புனைவு எழுத்து வாழ்க்கையில் சுந்தரபுத்தனின் இடம் தவிர்க்கமுடியாதது. அதன் நீட்சியாக அவர் வந்து சேர்ந்திருக்கும் அல்லது அடைந்திருக்கும் இடம் "பெரியவன்". இந்நாவலின் களன் அவரது சொந்த வாழ்க்கைதான், வழக்கம்போல் எல்லா எழுத்தாளர்களும் கண்டடைகிற நாவலுக்கான தரிசனம் புத்தனுக்கும் இந்தப் புள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது.
நாவல்:
ஒரு சிறுநகரத்தின் பகுதிநேர செய்தியாளர், விவசாயி என வேறுவேறு முகங்களைக் கொண்டிருந்தாலும், யதார்த்த வாழ்க்கையில் பொருளாதாரத்தின் கோரப்பற்களுக்குள் சிக்கி நசுங்கும் நடுத்தரவர்க்க குடும்பத் தலைவராக அவர் படாதபாடுபட்டுக்கொண்டிருந்தார். ஒருபக்கம் உலக சிந்தனையாளர்களின் புத்தக வாசிப்பும், மறுபக்கம் காசு தேடி அலைவதுமாக அலைக்கழிப்பு. என்ன செய்து விடமுடியும். அவரது மனதில் அமைதியின் நதி ஓடிக்கொண்டுதான் இருந்தது...