மலைச்சி


Author: நந்தன் கனகராஜ்

Pages: 80

Year: 2025

Price:
Sale priceRs. 120.00

Description

கடந்துபோன காலத்தை சிருஷ்டிக்கின்ற நந்தன் கனகராஜின் மனம் தெற்கத்தி மண்ணாகவே உருபெற்று இருக்கிறது. அந்த மனம், தன் வாழ்வியல் நினைவுகளையும், தன் மனிதர்களையும், தன் நிலப்பரப்பையும், தாவரங்கள் மற்றும் விலங்குகளையும் துல்லியமான எழுத்துப் பிரதிகளாக உருமாற்றியுள்ளது. ஒரு கவிதை உருவாக்கிடும் சித்திரம் என்பதைத் தாண்டி, ஒரு தொகுப்பே உருவாக்கிடும் சித்திரமாகவும் இது இருக்கிறது. - எழுத்தாளர் அழகிய பெரியவன்  நந்தன் அவதானிப்பது சிறுகுடி வாழ்வின் பண்பாட்டு அசைவுகளை. இத்தகைய நுண்ணரசியல் வழியாக மிகச் சின்ன சின்ன புள்ளிகளை வைக்கிறார். கவிதை தன்னை வாசிப்பவரை, இப்புள்ளிகளை இணைக்கத் தூண்டுகிறது. அப்படி இணைக்கும்போது இதில் ஒரு கிராமம் தோன்றுகிறது. ஒரு தேசம் தோன்றுகிறது. இவற்றின் மனிதர்கள் தோன்றுகிறார்கள். ஓர் அரசியலும் தோன்றிவிடுகிறது. நந்தன் ஒரு விதையைத்தான் ஊன்றுகிறார். நாம் காட்டை தரிசிக்கிறோம். - கவிஞர் ஆர். கரிகாலன்

You may also like

Recently viewed