Description
"கடவுள் என்றால் நம்மை காப்பவன், நம் வேண்டுதலுக்கு, துயரங்களுக்கு ஆறுதல் அளிப்பவன், வரம் தருபவன், நமக்கு நல்லன எல்லாம் செய்பவன்... இப்படித்தான் கடவுளை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒருத்தி மட்டும் கடவுளிடம் தனக்கு வேண்டியதை எதுவுமே கேட்கவில்லை. அவன் நன்றாக இருக்க வேண்டும் என, விரும்புகிறாள். அவன் நலனில் மட்டுமே அக்கறை கொள்கிறாள். அவனுக்கு உணவு படைக்கவில்லை என்றால், இவள் கவலை கொள்கிறாள். அவனுக்கு மாலை சூட நேரமானால் முகம் வாடுகிறாள். எப்போதும் அவனைப் பற்றியே சிந்தித்து, அவனைப் பற்றிய கதைகளை மட்டுமே கேட்டு வளர்கிறாள், ஒரு கு(சு)ட்டிப் பெண்! அவள் தான் நாம் அனைவரும் அறிந்த, ஆழ்வார்களில் ஒரே பெண் என்ற சிறப்புக்குரிய கோதை ஆண்டாள்."