Description
திரைப்படக் கல்லூரியில் படித்து முடித்து வெளியே வரும் மாணவர்கள் தாங்கள் சொந்தமாக படம் எடுக்க கதையும், பணமும் தேடுகிறார்கள். அவர்களுக்கு கதை கிடைத்ததா, பணம்கிடைத்ததா. அது தான் இந்த நாவல். இது மும்பையில் நடக்கும் கதை. தாரமங்கலம் வளவன் ஒரு பொறியாளர். தனது பணியின் பொருட்டு இந்தியாவின் பல பாகங்களில் பணியாற்றியவர். இது வரை இரண்டு சிறுகதை தொகுப்புகளும், இரண்டு நாவல்களும் இவர் எழுதி உள்ளார். இவைகள் அனைத்தும் காவ்யா பதிப்பகத்தால் பதிப்பிக்கப் பட்டுள்ளது. அமேசான் கிண்டிலிலும் கிடைக்கும். கடிகார கோபுரம், இவரது மூன்றாவது நாவல். இவரது படைப்புகள் கணையாழி, கல்கி, தினமலர், பாக்யா, அக்னி மலர்கள், காவ்யா தமிழ் போன்ற அச்சு இதழ்களில் வந்துள்ளது. தனது கதைகள் அனைத்தும் என்கிறார் தாரமங்கலம் வளவன். சாமான்ய மக்களைப் பற்றியது