Description
வத்தி மனையிலிருந்து எழுந்து. இருட்டுவதற்கு முன்பாகக் காட்டுப்பக்கம் நடக்கத் தொடங்கினாள். ஆவாரங்காட்டைக் கடந்து. சகுரக்
குட்டை மலையில் ஏறினாள். யாராவது பார்க்கிறார்களா எனச் சுற்றி முற்றிப் பார்த்துக்கொண்டாள். கொள்ளாபுரியம்மன் கோயில் பக்கமாகச் செம்மறி ஆடுகளை மேயவிட்டு. கரிங்கல் குன்று பக்கமாகக் குந்தியிருந்த கருப்பன் மட்டும்தான் அவள் கண்களுக்குத் தெரிந்தான். ஆவாரஞ்
செடிகளுக்கிடையில், நுணா செடியை ஒட்டி நன்றாகச் செழித்து வளர்ந்திருந்தது ஒரு ஒட்டந்தழைச் செடி. மீண்டும் ஒரு முறை சுற்றிலும் பார்த்துவிட்டு, மூன்று கைப்பிடி அளவு ஒட்டந்தழையைக் கிள்ளிக்கிள்ளித் தன் புடவை மடியில் போட்டுக்கொண்டாள். ஓட்டந்ழையைத் தின்று தற்கொலை செய்துகொள்கிறவர்கள், அந்தத்
தழையைக் கல்லில் வைத்து அரைத்து, அதை வழித்து நக்கி, விழுங்கி விடுவார்கள். விழுங்கிய கால் மொ நேரத்திற்குள் வாயில்
தள்ளிவிடும். வாயைக் குட்ட்டிக் குமட்டி வாந்தி எடுத்து, விசயம் வெளியே தெரிவதற்குள் மேல் லோகம் போய்ச் சேர்ந்துவிடுவார்கள். நுரை அதைப் போலவே அரைத்து, நக்கிவிட்டுப் போய்ச் சேர்ந்துவிடலாம் என்றுதான் ராபி யும் காட்டுக்குக் கிளம்பினாள். காட்டை நோக்கி எவ்வளவு வேகமாக நடந்தாலும் பாதை நீண்டு கொண்டே இருந்தது. பாதை நீள நீள அவளின் பயமும் நீண்டது. ஒட்டந்தழையைத் தின்று அவளும் போய்ச் சேர்ந்துவிட்டால், ஆதிலட்சுமியின் கதிய? தந்தை இல்லாமல், தாயும் இல்லாமல் அவள் எப்படியெல்லாம் சீரழிந்து சின்னா பின்னாமாகிப் போவாளோ என்கிற பயம் தொடங்கியது. கிழவியால் மட்டும் எத்தனை காலத்துக்குப் பேத்தியைக்
அவளை வதைக்கத் காப்பாற்ற முடியும்..? தழையைப் பறிக்கிற அந்தக் கணத்தில்தான் மாற்றி முடிவெடுத்தாள். செத்தால் மூன்று பேரும் சேர்ந்தே
ஆதிலட்சுமியும், கிழவியும் அதற்கு ஒத்துக்கொள்வார்களா...? சாக வேண்டும். ஆனால் ஆதிலட்சுமியும், கிழவியும் அதற்கு ஒத்துக்கொள்வார்களா...?