Description
இஸ்லாமிய வரலாற்றில் உள்ள சில விஷயங்கள் பொதுவெளியில் விரிவாக பேசப்பட்டதில்லை. எழுதப்பட்டதுமில்லை. சில நபிமொழிகளின் பின்னால் உள்ள வரலாற்று ரீதியான உண்மைகளுக்கும் இது பொருந்தும். உதாரணமாக இசைகூடுமா, காலில் விழலாமா போன்ற கேள்விகளுக்கான பதில்களைச் சொல்லலாம். இவற்றின் பின்னால் உள்ள சொல்லப்படாத விஷயங்களைத் துணிச்சலாகவும் விரிவாகவும் எடுத்துரைக்கிறார் நாகூர் ரூமி.