Description
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தொல்காப்பியர் ஆய்விருக்கையும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் இணைந்து இந்நூலினை வெளியிடுகின்றன கால்டுவெல் (1814-1891) ஆங்கிலத்தில் எழுதிய திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலின் இரண்டாம் பதிப்பின் (1875) முதல், முழுமையான தமிழ் மொழிபெயர்ப்பு இது. மொழிபெயர்ப்பாளர் லண்டன் சென்றிருந்தபோது (2019) பிரிட்டிஷ் தேசிய ஆவணக் காப்பகமான பிரிட்டிஷ் நூலகத்தில் இரண்டாம் பதிப்பைத் தமிழகத்தில் வெளியான பதிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்துச் செய்த மொழிபெயர்ப்பு. ஒப்பிலக்கணத்தின் இணைப்பில் உள்ள சில கட்டுரைகள் தமிழ்நாட்டுச் சமூகம், இனத்தவர் மீது கால்டுவெல் மானிடவியல் நோக்கில் கள நிலவரம் உணர்ந்து எழுதப்பட்டவை. மொழிகளின் ஒப்புமையை மொழிவழியாக உறுதிசெய்தபின் மக்களின் இனவழியாகக் கிடைக்கும் சான்றுகளோடு ஒப்பிடுவது கால்டுவெல்லின் அறிவியல் பார்வை. பரவலாக அறியப்படாத காலத்திலேயே தொல்காப்பியரையும் தொல்காப்பியத்தையும் என்மனார் என்னும் வினைவடிவத்தையும் குறிப்பிட்டிருப்பது தமிழ்ச்சான்று திரட்டுவதில் அவர் காட்டிய தீவிரத்திற்கு எடுத்துக்காட்டு