படிமுறைத்தமிழ் மொழியியலும் பயன்பாடும்

Save 11%

Author: சு.இராசரத்தினம்

Pages: 388

Year: 2022

Price:
Sale priceRs. 800.00 Regular priceRs. 900.00

Description

மனம் மனிதனின் அளப்பரிய சொத்து. மனவெளியிலிருந்துதான் சிந்தனை முளைவிடுகின்றது. சிந்தனையின் தெளிவுக்குத் துணைபுரிவது மொழி, இந்த மொழியை உருவாக்கும் வல்லமை மனிதனின் ஒரு மகத்தான சக்தி, இவ்வாறு மனிதன் தான் உருவாக்கிய மொழியைப் பரப்பும் பொருட்டு. கையாளும் மொழிகற்பித்தல் முறையானது கல்வியியலின் ஒரு முக்கிய துறையாகக் கருதப்பட்டு வருகின்றது. இது சமகால நவீன உலக அசைவியத்துக்கு ஏற்ப, முதல்மொழி கற்பித்தல், இரண்டாம்மொழி கற்பித்தல் எனக் கிளைபிரிந்து வளர்ந்து வருகின்றது.

இனம், மொழி, அரசியல், பண்பாடு ஆகிய தளங்களில் நீண்ட காலம் அயராது உழைத்து வருபவரான "சித்தம் அழகியான் " சுப்பிரமணியம் இராசரத்தினம் அவர்கள். தமிழினம் புலம்பெயர்ந்து உலகெலாம் பரவி வாழும் இன்றைய சூழலில், தமிழ்மொழி உயிரிழந்து போவதைத் தடுக்கும் முயற்சியிலும் முனைப்போடு ஈடுபட்டு வருகின்றார். தமிழை இரண்டாவதுமொழியாகக் கற்க விரும்பும் மாணவர்களுக்குக் கைகொடுத்து உதவுவதற்கெனத் தமது வாணாளை அர்ப்பணித்து வருகின்றார்.

ஏற்கனவே பல அரிய நூல்களை எழுதித் தமிழன்னையின் பாதங்கள் முன்னே படைத்துள்ள இவரது நூலாக்க முயற்சிகளில்

1.தமிழீழம் நாடும் அரசும் (வரலாற்று ஆய்வு நூல்)

2. பண்பாடு - வேரும் விழுதும் (2008) தமிழக அரசினால் முதற்பரிசு வழங்கப்பெற்றுச் சிறப்பிக்கப்பட்ட நூல்)

3. தமிழ்மொழியைக் கற்பிப்பதற்கென 12 நிலைகளில், 42 பாட பயிற்சி நூல்கள் என்பன குறிப்பிடத்தக்கன.

இந்த நற்பணியின் வரிசையில், இப்போது "படிமுறைத்தமிழ் -மொழியியலும் பயன்பாடும்' எனும் இந்த அருமருந்தன்ன நூலை ஆக்கி அளித்திருக்கின்றார். பயனாக்க மொழியியல் உத்திகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட இந்நூலானது தமிழோடு ஊடாடும் பலதரப்பட்டோருக்கும் பயன்தரவல்ல ஓர் அரிய சொத்தாக விளங்கும் என்பது நிச்சயம்.

தமிழ்மொழி கற்பித்தலில் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்பட்டுவந்த பாரம்பரிய வழிமுறைகளை விடுத்து, பேச்சொலியியல் (Phonetics) அடிப்படையில் இலகுவும் எளிமையும் புதுமையும் உள்ளடங்கிய, தர்க்கரீதியான தமிழ் கற்பித்தல் முறைமையையே இப்படிமுறைத்தமிழ் மூலம் இவர் அறிமுகம் செய்கின்றார்.

தனது முழுநேரப் பணியாக உலகின் பல பாகங்களிலுமுள்ள ஆசிரியர்களுக்கும் பயிற்சியளித்துவரும் இவரது இக்கற்பித்தல் முறையானது. இன்று பலராலும் ஆர்வத்துடன் பின்பற்றப்படுவதுடன் மென்மேலும் வளர்ந்து வருகின்றமை. இவர் தமிழ்மொழிக்கும் தமிழினத்துக்கும் ஆற்றி வரும் அளப்பரிய தொண்டுக்கான அடையாளமாகும்.

புதிய கற்பித்தல் வழிமுறையை அறிமுகம் செய்து, தமிழ் வளர்க்க வேண்டும் என்ற நினைவு நல்லது கொண்டதோர் அறிவார்ந்த தமிழ் மகனாக உழைத்து வரும் திரு. இராசரத்தினம் அவர்களது கனவு நனவாக வேண்டும் என வாழ்த்தி, அறிமுகம் செய்து வைப்பதில் பெருமகிழச்சி அடைகிறேன்.

க. நவம்

எழுத்தாளர், கனடா

You may also like

Recently viewed