Description
பிரிட்டீஷார் தங்களின் நாடு பிடித்த வரலாற்றை ஒளிவுமறைவின்றி, கடிதங்களாய், நாட்குறிப்புகளாய், அரசாங்க தகவல் பரிவர்த்தனைகளாய் பதிவு செய்திருக்கிறார்கள். பெரும்பாலும் அத்தகவல்கள் துல்லியமானவை. மிகை கலப்பில்லாதவை. சுதேசிகளின் பலம், பலவீனம், பிரிட்டீஷாரின் தந்திரம், சாதுர்யங்கள் என எல்லாம் வெட்ட வெளிச்சமாய் ஆவணங்களில் இருக்கின்றன. வீரபாண்டிய கட்டபொம்மன் எனகிற கட்ட பொம்மு நாயக் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதில் தொடங்கி, அவர் தூக்கிலிடப்படுவதும் அதன் தொடர்ச்சியாக பாளையங்கள் எதிர்கொள்ளும் மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் குறித்து பிரிட்டீஷ் ராணுவ அதிகாரிகள், கலெக்டர்களுக்கிடையில் நடைபெற்ற கடிதப் பரிமாற்றத்தின் தமிழாக்கம் இந்நூல், சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் மு.ராஜேந்திரனின் இரண்டாவது மொழியாக்க நூல்